வவுனியா விபத்தில் படுகாயமடைந்த 3 பிள்ளைகளின் தந்தை உயிரிழப்பு
வவுனியா ரயில் நிலைய வீதியில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த குடும்பஸ்தர் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், இன்று (திங்கட்கிழமை) காலை உயிரிழந்துள்ளார்.
கடந்த 15 ஆம் திகதி மாலை குருமன்காடு பகுதியில் இருந்து ரயில் நிலைய வீதியூடாக பயணித்த மோட்டார் சைக்கிள், எதிரே வந்த பாரவூர்தியுடன் மோதி விபத்துக்குள்ளாகியது.
இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையின் விபத்து பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
அவர்களில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக இருந்ததையடுத்து, அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வந்தது.
இந்நிலையில் பத்து நாட்களின் பின்னர் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சமயபுரத்தைச் சேர்ந்த கிறிஸ்டி (வயது -39) என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து தொடர்பான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
கருத்துக்களேதுமில்லை