சமூக இடைவெளியை பேணாத நபர்கள் கைது செய்யப்படுவர் – பொலிஸ் எச்சரிக்கை
சமூக இடைவெளியை கடைப்பிடிக்காத நபர்களை கைது செய்யும் நடவடிக்கையை நாளை முதல் முன்னெடுக்கவுள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜாசிங்கவினால் பொலிஸாருக்கு அதிகாரம் வழங்கும் வகையிலான விசேட சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
நாடளாவிய ரீதியில் நாளை ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்படவுள்ளது. அதன் பின்னர் மீள் அறிவித்தல் வரை இரவு 10.00 மணி தொடக்கம் அதிகாலை 4.00 மணி வரை மாத்திரம் ஊரடங்கு அமுல்படுத்தப்படவுள்ளது.
மேலும் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்ட பின்னர், பொதுமக்கள் சுகாதார விதிமுறைகளை பின்பற்றி அவர்களின் அன்றாட நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில் பொதுமக்களுக்கான அறிவுறுத்தல்களை அரசாங்கம் வெளியிட்டுள்ளது.
இந்நிலையில், அதனை மீறும் வகையில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காத நபர்களை கைது செய்யும் நடவடிக்கையும் நாளை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை