சமீபத்தில் நாடுதிரும்பிய 80 பேருக்கு கொரோனா – பிரஜைகளை அழைத்துவரும் நடவடிக்கையை பரிசீலனை செய்யும் அதிகாரிகள்
வெளிநாடுகளில் சிக்கித்தவிக்கும் இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்துவரும் நடவடிக்கைகளை பரிசீலனை செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற விசேட ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார்.
கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக பல நாடுகளில் சிக்கியிருந்தது சமீபத்தில் இலங்கைக்கு திரும்பிய பலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
சமீபத்தில் வந்த சுமார் 80 இலங்கையர்களுக்கு கொரோனா வைரஸ் தாக்கம் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இலங்கையில் கொரோனா தாக்கம் உறுதியான நோயாளிகளின் எண்ணிக்கையை 1148 ஆக உயர்த்தியுள்ளது.
இன்று மாலை 3 மணி நேரப்படி 7 நோயாளிகள் அடையாளம் காணப்பட்டனர், அவர்கள் அனைவரும் குவைத்தில் இருந்து திரும்பியவர்கள். அத்தோடு குவைத்தில் இருந்து திரும்பிய 49 பேர் நேற்று நோயாளிகளாக அடையாளம் காணப்பட்டனர்.
இதுவரை வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு வந்து தனிமைப்படுத்தப்பட்டவர்களில் 120 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை