இன்று முதல் மாகாணங்களுக்கு இடையிலான பேருந்து சேவைகள் ஆரம்பம்

கொழும்பு மற்றும் கம்பஹா தவிர்ந்த ஏனைய மாகாணங்களுக்கு இடையிலான பேருந்து சேவைகள் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அதன்படி அதிகாலை 4.30 மணி முதல் மாலை 6 மணி வரையில் சுகாதார ஆலோசனைகளுக்கு உட்பட்டு இவ்வாறு போக்குவரத்து சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும் ஐந்து வீதிகளின் ஊடாக கொழும்புக்கு வரும் பேருந்துகள் கொழும்புக்குள் பிரவேசிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி,

  • கண்டி வீதியினூடாக வரும் மாகாணங்களுக்கிடையிலான பேருந்துகள் நிட்டம்புவ வரை மாத்திரமே பயணிக்க முடியும்.
  • மார்க்க இலக்க 5 இன் ஊடாக பயணிக்கும் மாகாணங்களுக்கிடையிலாக பேருந்துகள் மினுவாங்கொடை வரை மாத்திரமே பயணிக்க முடியும்.
  • காலி வீதியினூடாக வருகைதரும் மாகாணங்களுக்கிடையிலான பேருந்துகள் பாணந்துறை வரை மாத்திரமே சேவையில் ஈடுபடும்.
  • அவ்வாறே அவிசாவளையினூடாக கொழும்புக்கு பயணிக்கும் மாகாணங்களுக்கிடையிலான பேருந்துகள் அவிசாவளை வரை மட்டுப்படுத்தப்படும்.
  • அதேபோல அநுராதபுரம் புத்தளம் மற்றும் குளியாப்பிட்டியிலிருந்து நீர்கொழும்பு வீதியில் சேவையில் ஈடுபடும் மாகாணங்களுக்கிடையிலான பேருந்துகள் நீர்கொழும்பில் நிறுத்தப்பட வேண்டும்.
  • அவ்வாறே தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் ஊடாக வரும் பேருந்துகள் கொட்டாவ வரை மாத்திரமே பயணிக்க முடியும்.
  • இந்த பேருந்துகளில் வசூலிக்கப்படும் கட்டணமானது குறித்த பேருந்து நிறுத்தப்படும் இடம் வரை மாத்திரமே அறவிடப்பட வேண்டும்.
  • இந்த பேருந்துகளின் முன்பக்கத்தில், குறித்த பேருந்து நிறுத்தப்படும் இறுதி இடம் தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்.
  • அவ்வாறே சுகாதார பிரிவினரால் வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களுக்கமையஇ அனைத்து பயணிகளும் கட்டாயமாக முகக் கவசம் அணிவதுடன் உரிய பொது சுகாதார விதிகளை பின்பற்றுமாறு போக்குவரத்து அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.