மாணவர்களுக்கு பரீட்சைகள் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வரும் க.பொ.தர உயர்தரப் பரீட்சைக்கான கால அட்டவணை பொய்யானது என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பரீட்சைகள் ஆணையாளர் வெளியிட்டுள்ள விசேட அறிக்கையில் இந்த விடயம் தொடர்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயர்தரப் பரீட்சை தொடர்பாக கல்வியமைச்சு மற்றும் பரீட்சைகள் திணைக்களத்தின் வெளியிடப்பட்டுள்ள உத்தியோகபூர்வ அறிவிப்புக்களுக்கு ஏற்ப செயற்படுமாறு பாடசாலைகளின் அனைத்து உறுப்பினர்களிடமும் கேட்டுக்கொள்வதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அந்த அறிக்கையில் மேலும் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.