திரையரங்குகளை மீண்டும் திறப்பதற்கு இதுவரை தீர்மானிக்கவில்லை என அறிவிப்பு!

திரையரங்குகளை மீண்டும் திறப்பதற்கு இதுவரை தீர்மானம் ஏதும் மேற்கொள்ளப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.

சிகையலங்கார நிலையங்கள் மற்றும் அழகுக்கலை நிலையங்கள் தற்போதும் சுகாதார ஆலோசனையின் பிரகாரம் இயங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும் சிறு ஹோட்டல்கள் மற்றும் சிறிய வர்த்தக நிலையங்களை திறப்பதற்கான அனுமதி இதுவரை வழங்கப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்