மேலும் 50 வழிகாட்டுதல்களை வெளியிடதிட்டம் – சுகாதார அமைச்சு

கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த சுகாதார அமைச்சினால் மேலும் 50 வழிகாட்டுதல்கள் வெளியிடதிட்டமிட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

இது குறித்து கருத்து தெரிவித்த அவர், நாட்டை வழமை நிலைக்குக் கொண்டுவர அனைத்து ஊழியர்களும் பணிபுரியுமாறு கட்டாயப்படுத்த வேண்டிய அவசியமில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

அத்துடன், வேலையின் நிமித்தம் எத்தனை ஊழியர்களை தங்களின் நிறுவனங்களில் பணிக்காக அமர்த்த வேண்டும் என்பதை நிறுவனத்தின் தலைவர்கள் தீர்மானிக்க வேண்டும் என அனில் ஜாசிங்க மேலும் தெரிவித்தார்.

இதேவேளை அலுவலகத்தில் அல்லது தொழிற்சாலையில் பணியிலிருக்கும்போது ஒருவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டால் என்ன நடவடிக்கைகளை எடுப்பது என்பது குறித்து வழிகாட்டுதல்களை வெளியிடவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அவர்களிற்கு வைத்தியசாலைகள் மற்றும் அம்பியூலன்ஸ் சேவைகள் குறித்த தொலைபேசி இலக்கங்கள் வழங்கப்படும் என்றும் சுகாதார அமைச்சின் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்