நாடு முழுவதும் 4,649 பேர் தனிமைப்படுத்தல் நிலையங்களில் உள்ளனர் – இராணுவத் தளபதி

நாடு முழுவதும் உள்ள 41 தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் 4,649 பேர் தொடர்ந்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இவர்களில் தனிமைப்படுத்தப்பட்ட காலத்தை நிறைவு செய்த 31 பேர் இன்று (செவ்வாய்க்கிழமை) விடுவிக்கப்படுவார்கள் என்று இராணுவத் தளபதி தெரிவித்தார்.

இதேவேளை 10 ஆயிரத்து 795 பேர் இதுவரை தனிமைப்படுத்தல் காலத்தை நிறைவு செய்து வீடுதிரும்பியுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்