கிளிநொச்சியில் புலிகளின் சீருடைகள் காணப்பட்ட பகுதியில் இன்று மீண்டும் அகழ்வு

கிளிநொச்சி – முகமாலை பகுதியில் எலும்புக்கூடுகள் மற்றும் புலிகளின் சீருடைகள் அடையாளம் காணப்பட்ட இடத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) மீண்டும் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

கிளிநொச்சி முகமாலை பகுதியில் கண்ணிவெடி அகற்றும் செயற்பாடு இடம்பெற்றுவரும் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை எலும்பு கூடுகள் அடையாளம் காணப்பட்டது.

அதன்பின்னர், அங்கு மேற்கொள்ளப்பட்ட அகழ்வில் குறித்த பகுதியில் விடுதலைப் புலிகளின் சீருடை மற்றும் துப்பாக்கிகளும் அடையாளம் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக நீதிமன்றுக்கு அறிவிக்கப்பட்ட நிலையில், அடையாளம் காணப்பட்ட மனித எச்சங்களை கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி பார்வையிட்டார்.

குறித்த பகுதிக்கு வருகை தந்த நீதிபதி அவற்றை பார்வையிட்டதுடன், எதிர்வரும் 26ஆம் திகதி அதாவது இன்று அகழ்வுப் பணிகளை முன்னெடுக்குமாறும் உத்தரவிட்டார்.

அதற்கமைய குறித்த பகுதியில் இன்று மீண்டும் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்கதக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.