மேல் மாகாணத்தில் இருந்து மேலும் 3000 பேர் சொந்த இடங்களுக்கு அனுப்பிவைப்பு!
கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக மேல் மாகாணத்தில் இரண்டு மாதங்களாக தமது சொந்த இடங்களுக்கு திரும்ப முடியாமலிருந்த மேலும் 3,000 பேர் இன்று (செவ்வாய்க்கிழமை) தமது சொந்த இடங்களுக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளனர்.
இந்நிலையில் மருத்துவ பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் சுமார் 2,000 பேர் பிலியந்தலவில் இருந்து இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்து மூலம் அழைத்துச் செல்லப்படவுள்ளனர்.
மேலும் கல்கிசையில் இருந்த 1000 பேர் இன்று புகையிரதம் மூலம் பெலியத்தை பகுதிக்கு அழைத்து செல்லப்படவுள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை மேல் மாகாணத்தில் சிக்கித் தவித்த 52 ஆயிரம் பேர் தங்கள் தொந்த இடங்களுக்கு செல்வதற்கு பதிவு செய்துள்ளதாகவும், 20 ஆயிரம் பேர் ஏற்கனவே தங்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இவர்கள் தங்கள் வீடுகளிலேயே தனிமைப்படுத்தல் காலத்தை நிறைவு செய்தத்திற்கான சான்றிதழை தத்தமது பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.












கருத்துக்களேதுமில்லை