கட்டாரில் தங்கியுள்ள இலங்கையர்களை நாளை நாட்டுக்கு அழைத்துவர நடவடிக்கை
கட்டாரில் தங்கியுள்ள 273 இலங்கையர்கள் நாளைய தினம் நாட்டுக்கு அழைத்துவரப்படவுள்ளனர்.
இதற்கமைய அவர்கள் ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விமானம் மூலம் நாளை நாட்டுக்கு அழைத்து வரப்படவுள்ளனர் என குறிப்பிடப்பட்டுள்ளது.
கட்டாரின் டோகா நகரில் இருந்து இன்று காலை 5.45 மணிக்கு இலங்கையர்கள் 273 பேரை ஶ்ரீலங்கன் விமானத்தின் மூலம் நாட்டிற்கு அழைத்துவர ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
குவைத்தில் இருந்து நாட்டிற்கு அழைத்துவரப்பட்டவர்களில் 90 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, கட்டாரிலிருந்து நாட்டிற்கு வரவிருந்த விமானத்தை தற்காலிகமாக இரத்து செய்ததாக ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் அட்மிரல் ஜயநாத் கொலம்பகே தெரிவித்தார்.
இந்நிலையில், குறித்த விமானம் நாளை இலங்கைக்கு வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை