ஆறுமுகத்தின் இழப்பு அரசுக்கும் மலையக மக்களுக்கும் பேரிழப்பு – வைத்தியசாலையில் பிரதமர் மஹிந்த தெரிவிப்பு
அமைச்சர் ஆறுமுகம் தொண்டமானின் திடீர் மறைவு குறித்துக் கேள்விப்பட்டவுடன் இன்றிரவு அவரின் சடலம் வைக்கப்பட்டிருந்த தலங்கம வைத்தியசாலைக்கு விரைந்த பிரதமர் மஹிந்த ராஜபக்ச, அவரின் மறைவு அரசுக்கும் மக்களுக்கும் குறிப்பாக மலையக மக்களுக்கும் பேரிழப்பு என்று அங்கு நின்ற ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார்.
ஆறுமுகத்தின் பூதவுடல் தற்போது ஜயரத்ன மலர்ச்சாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. இறுதிக்கிரியை விபரங்கள் நாளை அறிவிக்கப்படும் என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
கருத்துக்களேதுமில்லை