அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல்

அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

மலையக மக்களின் உரிமைகளுக்காகவும் நலன்களுக்காகவும் கடந்த 30 வருடங்களுக்கு மேலாக ஒயாது ஒலித்த குரல் மௌனித்து விட்டதாக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

மேலும், ஆறுமுகன் தொண்டமானின் மரணச் செய்தி ஆழந்த வேதனைய ஏற்படுத்தியதாகவும், இவரின் இழப்பு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும் என்றும் செல்வம் அடைக்கலநாதன் தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.

அதேபோன்று, தம்பி ஆறுமுகன் தொண்டமானின் இழப்பு மலையக மக்களுக்கு பேரிழப்பாகும் என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவருமான முன்னாள் இராஜாங்க அமைச்சர் இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த இக்கட்டான நிலையில் துயரத்தில் இருக்கும் அன்னாரின் மனைவி பிள்ளைகள் உறவினர்கள் உட்பட அவரது விசுவாசிகள் அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்களையும் இவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, இவரது இறுதி கிரிஜைகள் மலையகத்தில் பூரண அரச மறியாதையுடன் நடப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இவரது இறுதி கிரிகைகள் முடியும் வரை மலையகத்தில் துக்கத்தினம் அனுஷ்டிக்கப்பட வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஆறுமுகன் தொண்டமானின் இழப்புக்கு முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனும் இரங்கல் வெளியிட்டுள்ளார்.

சுமார் இருபது வருடங்கள் மலையக சமூகத்தில் அவர் ஏற்படுத்திய மாற்றங்கள், அவரது ஆளுமைகளை வெளிப்படுத்தவதாகவும் கொழும்பு றோயல் கல்லூரியில் கல்வி பயின்ற காலத்திலே அவர் சமூகத் தலைவனுக்குரிய ஆளுமைகளை வெளிப்படுத்தியதாகவும் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

அதேநேரம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் ராமநாதனும் அன்னாரின் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

யாழ். மாவட்ட மக்களுக்காக பல வீட்டுத்திட்டங்களையும் மலையக வாழ் யாழ். பல்கலைகழக மாணவர்களுக்கு கல்வி நடவடிக்கைகளுக்கான பல உதவி திட்டங்களையும் அவர் மேற்கொண்டுள்ளார் என்று அங்கஜன் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.