குகுலே கங்கையின் இரு வான் கதவுகள் திறப்பு!

நாட்டில் நிலவும் மழையுடனான சீரற்ற காலநிலை காரணமாக குகுலே கங்கையின் இரு வான் கதவுகள் திறந்துவிடப்பட்டுள்ளன.

அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளது.

வெத்தாகல பகுதிகளில் நேற்றிரவு பெய்த கனமழையால் குக்குலே கங்கை நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் உயர்வடைந்துள்ளது.

இதன் காரணமாக, குகுலே கங்கை நீர்த்தேக்கத்தை அண்டிய தாழ் பகுதியில் வசிக்கும் மக்களை மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்