பொதுத் தேர்தல் திகதியை ஆட்சேபித்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான 8ஆம் நாள் விசாரணை இன்று

ஜுன் 20ஆம் திகதி பொதுத் தேர்தல் நடத்துவதை ஆட்சேபித்து தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான உயர்நீதிமன்ற விசாரணைகள் எட்டாவது நாளாகவும் இன்று (வியாழக்கிழமை) இடம்பெறவுள்ளது.

பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, நீதியரசர்களான புனவேக அலுவிஹார, சிசிர டி ஆப்று, பியந்த ஜயவர்தன மற்றும் விஜித் மலல்கொட ஆகிய ஐவர் அடங்கிய உயர்நிதிமன்ற ஆயம் முன்னிலையில் இந்த விசாரணைகள் இடம்பெறவுள்ளன.

குறித்த மனுக்கள் மீதான விசாரணைகள் நேற்று ஏழாவது நாளாகவும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, சட்டமா அதிபர் சார்பில் விளக்கமளித்த மேலதிக மன்றாடியர் நாயகம் இந்திக டி சில்வா தமது கருத்துக்களை நேற்று நிறைவு செய்தார்.

இதற்கிடையில் இந்த அடிப்படை மனுக்களில் தலையிட்டு விளக்கமளிப்பதற்காக இடைநடுவில் மனுத்தாக்கல் செய்த பேராசிரியர் பண்டுல எதகம சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி மனோகர டி சில்வா தமது கருத்துக்களை முன்வைத்தார்.

சட்டரீதியாகவே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் கடந்த மார்ச் மாதம் 2ஆம் திகதி வர்த்தமானி வெளியிடப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த நிலையில், குறித்த மனுக்கள் மீதான விசாரணைகளை இன்றைய தினம் முற்பகல் 10 மணிவரை நீதியரசர்கள் ஆயம் ஒத்திவைத்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.