இலங்கையில் தாண்டவமாடும் கொரோனா – ஒரே நாளில் 150 பேருக்கு தொற்று
கொரோனா தொற்றுக்கு உள்ளான மேலும் 16 பேர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 1469 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில், நேற்றைய தினம் மாத்திரம் 150 கொரோனா நோயாளிகள் நாட்டில் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அவர்களுள் 92 பேர் குவைத் நாட்டில் இருந்து நாட்டிற்கு வருகைத் தந்து தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டவர்கள் என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
மேலும் 53 பேர் இலங்கை கடற்படையைச் சேர்ந்தவர்கள் எனவும் 5 பேர் சென்னையில் இருந்து வருகை தந்தவர்கள் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கொரொனா தொற்றுக்கு உள்ளானவர்களில் 732 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
அதேநேரம் மேலும் 727 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வரும் நிலையில், 75 பேர் கொரோனா தொற்று சந்தேகத்தில் வைத்திய கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் கொரோனா தொற்றுக்கு இலக்காகி இலங்கையில் இதுவரையில் 10 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை