முக்கிய தகவல்கள் சிலவற்றினை வெளியிட்டது கல்வியமைச்சு!

முதலாம் தரத்திற்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான விண்ணப்பப் படிவங்களை எதிர்வரும் ஜூலை மாதம் 15ஆம் திகதிக்கு முன்னர் பாடசாலைகளுக்கு அனுப்பிவைக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், பல்கலைக்கழக அனுமதிக்காக இணையத்தளம் ஊடாக விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் காலம் எதிர்வரும் ஜூன் மாதம் 2 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

முன்னதாக, பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டு இரண்டு வாரங்களுக்குள் பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்ப படிவங்கள் ஏற்றுக்கொள்ளப்படுமென அறிவிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்