ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஆகியவற்றின் செயற்குழு கூட்டங்கள் இன்று

ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஆகியவற்றின் செயற்குழு கூட்டங்கள் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு கூட்டம், கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் சிறிகொத்தவில் காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியில் வேட்புமனுக்களை கையளித்த ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள் 102 பேரின் கட்சி உறுப்புரிமையை இரத்து செய்வது தொடர்பாக இன்று கூடவுள்ள ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எனினும் தாங்கள் கட்சியின் யாப்பினை மீறவில்லை என சஜித் தரப்பினர் தொடர்ச்சியாக தெரிவித்து வருகின்றனர்.

இதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழு கூட்டம், கோட்டையில் அமைந்துள்ள கட்சி அலுவலகத்தில் சஜித் பிரேமதாச தலைமையில் பிற்பகல் 2 மணிக்கு இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.