பெலாரஸுல் இருந்து 277 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

பெலாரஸ் நாட்டில் இருந்து 277 இலங்கையர்கள் ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விசேட விமானத்தில் நாடு திரும்பியுள்ளனர்.

குறித்த பயணிகள் நேற்று (வியாழக்கிழமை) இரவு 11.45 மணியளவில் பெலாரஸ் மின்ஸ்க் நகர் விமான நிலையத்தில் இருந்து வந்த ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான யூ.எல் 1206 ரக விசேட விமானத்தில் நாட்டை வந்தடைந்தனர்.

இவ்வாறு, அவர்கள் விமான நிலையத்தை வந்தடைந்ததன் பின்னர், இலங்கை விமானப் படையினரால் கிருமி தொற்று நீக்கம் செய்யப்பட்டதுடன் கொரோனா தொற்று அறிகுறிகள் உள்ளதாக என்றும் பரிசோதிக்கப்பட்டுள்ளது.

அதன் பின்னர் குறித்த இலங்கையர்கள் அனைவரும் இலங்கை இராணவத்தினரால் விசேட பேருந்து ஊடாக தனிமைப்படுத்தல் செயற்பாட்டிற்காக நிலையங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

அத்துடன் குறித்த விமானத்தில் வருகை தந்த பயணிகளில் பெரும்பாலானோர் அந்நாட்டில் உயர் கல்வியினை கற்பதற்காக சென்றிருந்த மாணவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.