யாழில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 51 கடற்படையினருக்கு கொரோனா!

யாழ்ப்பாணம் விடத்தற்பளை தனிமைப்படுத்தல் மையத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த கடற்படையினர் 51 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

வெலிசறை கடற்படை முகாமைச் சேர்ந்த கடற்படையினர் 300 பேர் வரையில் விடத்தற்பளை இராணுவ முகாமில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இவர்களுக்கான மாதிரிகள் கடந்த 25ஆம் திகதி பெற்றுக்கொள்ளப்பட்டிருந்தது. அவை, கொழும்பு மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்துக்கு அனுப்பப்பட்டிருந்தது.

பரிசோதனை முடிவுகள் நேற்றுமுன்தினம் மாலை கிடைக்கப்பெற்றன. அதில் 51 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் நேற்றுக் காலை சிகிச்சைக்காக வெலிக்கந்தை ஆதார வைத்தியசாலை, முல்லேரியா ஆதார வைத்தியசாலை மற்றும் கடற்படை பொது வைத்தியசாலை ஆகியவற்றுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர் எனவும் அவர் மேலும் கூறினார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்