இலங்கைக்கு வருகை தந்துள்ள பிலிப்பைன்ஸ் நாட்டு கப்பல்கள்
இலங்கையில் தங்கியுள்ள பிலிப்பினியர்களை பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு மீள அழைத்துச் செல்ல BRP Davao del Sur மற்றும் BRP Ramon Alcaraz ஆகிய கப்பல்கள் கொழும்பு துறைமுகத்திற்கு இன்று (சனிக்கிழமை) வருகைத் தந்துள்ளன.
கொரோனா வைரஸ் பரவலால் விதிக்கப்பட்டுள்ள பயணக் கட்டுப்பாடுகள் காரணமாக சொந்த நாட்டுக்கு திரும்ப முடியாமல் இலங்கையில் தங்கியியுள்ள பிலிப்பையின் சுற்றுலா பயணிகள் மற்றும் தொழிலாளர்கள் அனைவரும் குறித்த கப்பல்களின் ஊடாக அழைத்துச் செல்லப்படவுள்ளனர்.
மேலும் கொழும்பு துறைமுகத்திலிருந்து கப்பல்களுக்கான பொருட்களை அவர்கள் பெற்றுக்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ஆனாலும் கப்பலில் வருகைத்தந்தவர்களுக்கு நாட்டுக்குள் கால்பதிக்க அனுமதி வழங்கப்படவில்லை. எனவே கப்பலில் பயணிக்க தயாரான பிலிப்பீனியர்கள் அனைவரும் கிருமி தொற்று நீக்கத்திற்கு உட்படுத்தப்பட்டு குறித்த கப்பலுக்கு அனுமதிக்கப்படுகின்றனர்.
அத்துடன் இந்த இரு கப்பல்களும் கொழும்பு துறைமுகத்திலிருந்து இன்று புறப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை