ரணிலுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை…!

ஐக்கிய தேசிய தேசிய கட்சி செயற்குழு உறுப்பினர்களில் 40 க்கும் மேற்பட்டவர்கள், தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டுவர முடிவு செய்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது என்றும் அதற்கமைய அரசாங்கத்துடன் கொடுக்கல் வாங்கல் டீல்களில் ஈடுப்பட்டுவரும் ஐ.தே.க.வைச் சேர்ந்த குழுவினருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அத்தகைய உறுப்பினர்கள் மோசடிகரமான செயற்பாடுகளினால், ஐக்கிய தேசியக் கட்சியின் ஏனைய உறுப்பினர்கள் காட்டிக் கொடுக்கப்பட்டுள்ளதாகவும், மக்கள் பிரதிநிதிகளை வழித்தவறச் செய்து செயற்குழு தீர்மானங்கள் ஊடாக அவர்களை ஏமாற்றுதல், செயற்குழுவின் தீர்மானத்திற்கு புறம்பாக செயற்படுதல், மற்றும் அரசாங்கத்துடன் இணைந்து டீல் செய்துக் கொண்டு கொடுக்கல் வாங்கலில் ஈடுப்பட்டமை தொடர்பாகவே இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை அரசாங்கத்துடன் இணைந்து அரசியல் இலாபம் தேடுகின்ற அனைத்து உறுப்பினர்களுக்கு எதிராகவும் நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.

பொதுத் தேர்தலின் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியை சமப்படுத்திக் கொண்டு, ஐக்கிய தேசியக் கட்சியை கைப்பற்றிக் கொண்டுள்ள குழுவிடமிருந்து அதனை மீட்டு, மாகாணசபை உறுப்பினர்கள் மட்டுமன்றி அனைத்து உறுப்பினர்களதும் சட்டம் மற்றும ஏனைய சலுகைகளை இலவசமாக பெற்றுக் கொடுப்பது தொடர்பாகவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற இந்த சந்திப்பில் பேசிய ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார, இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் கட்சிக்கு துரோகம் இழைத்த மற்றும் பொதுமக்களின் விருப்பத்திற்கு எதிராக செயல்பட்டவர்களுக்கு எதிரானது என்றும், சிலருக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் கூறினார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.