ஜூன் முதலாம் திகதி முதல் 33 ரயில்கள் சேவையில் – ரயில்வே திணைக்களம்

ஜூன் முதலாம் திகதி முதல் 33 ரயில்கள் சேவையில் ஈடுபடுத்தப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

19,593 பேர் வேலைக்காக பயணிக்க ரயில்வே திணைக்களத்தில் பதிவு செய்துள்ளதாக ரயில்வே பொது முகாமையாளர் டிலந்த பெர்னாண்டோ தெரிவித்தார்.

இதேவேளை அடுத்த வாரம் முதல் 5000 க்கும் மேற்பட்ட பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்த திட்டமிட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை அறிவித்துள்ளது.

ஏற்கனவே 4800 பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் தெரிவித்தார்.

மேலும், இடைக்கால பயணங்களுக்காக 3200 தனியார் பேருந்துகளும் சேவையில் ஈடுபடுத்தப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்