நாடு இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது – மைத்திரி

நாடு இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அறிவித்துள்ளார்.

கண்டியில் இன்று (சனிக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி, எதிர்வரும் பொதுத் தேர்தலை இலக்காகக் கொண்டு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன பெரமுனவும் பிரச்சாரத்தை முன்னெடுக்க தயாராக உள்ளது என்றும் தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் நெருக்கடியால் தேர்தல் நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன என்றும் பொதுத் தேர்தலில் வெற்றியைப் பெற இப்போது அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன என்றும் அவர் கூறினார்.

அத்தோடு தற்போது தேர்தலை நடத்துவதற்கான சூழல் நாட்டில் இல்லை என்றகருத்தை தான் நிராகரிப்பதாகவும் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்