இதுவரை 63 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு பி.சி.ஆர். பரிசோதனை!

இலங்கையில் இதுவரை 63 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா வைரஸை கண்டறியும் பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி நேற்று (சனிக்கிழமை) மாத்திரம் 1,727 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.

அதன்படி, இந்தவருடம் பெப்ரவரி மாதம் 18 ஆம் திகதி முதல் முதல் இதுவரையான காலப்பகுதியில் 63 ஆயிரத்து 93 பி.சி.ஆர் சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை நாள் ஒன்றுக்கு நடத்தப்போடும் பி.சி.ஆர் சோதனைகளின் எண்ணிக்கையை இரு மடங்காக அதிகரிக்க சுகாதார அதிகாரிகள் ஏற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.