ஆறுமுகன் தொண்டமானுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் அஞ்சலிப் பதாதைகள்
மறைந்த அமைச்சரும், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவருமான ஆறுமுகன் தொண்டமான் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் அஞ்சலிப் பதாதைகள் காட்சிப்படுத்தப்பட்டன.
கடந்த 26ம் திகதி திடீர் மரணம் எய்திய இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் அவர்களுக்கு பல்வேறு தரப்பினரும் அஞ்சிலி செலுத்தி வருகின்றனர். அவ்வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் மட்டக்களப்பில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கி.துரைராசசிங்கம் அவர்களின் வழிகாட்டலில் அன்னாருக்கான அஞ்சலியைச் செலுத்தும் முகமாக அஞ்சலிப் பதாதைகள் மட்டக்களப்பு நகர் மற்றும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி மட்டக்களப்புக் காரியாலயம் என்பனவற்றில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை