திருமண மண்டபங்களில் பின்பற்றவேண்டிய சுகாதார நடைமுறைகள் குறித்து முக்கிய அறிவிப்பு
திருமண, வரவேற்பு மண்டபங்கள் மற்றும் விருந்தினர் விடுதிகளுக்கான சுகாதார பாதுகாப்பு நடைமுறைகள் மண்டப வாயிலில் காட்சிப்படுத்தப்பட வேண்டும் என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில், “நடைபாதைகள், ஆசனங்கள், அலங்கார அமைப்புகள் மற்றும் ஏனைய நோக்கங்களுக்கான இட ஒதுக்கீடுகளைக் கருத்திற்கொண்டு மண்டபத்தின் இடப்பரப்பிற்கு ஏற்ற வகையில் ஆசனங்களின் அனைத்துப் பக்கங்களிலும் ஒரு மீற்றர் தனிநபர் இடைவெளியைப் பேணக்கூடிய வகையில் அனுமதிக்கக் கூடிய விருந்தினர்களின் எண்ணிக்கை முகாமைத்துவத்தினரால் தீர்மானிக்கப்பட வேண்டும்.
எந்தவொரு மண்டபத்திலும் ஆகக்கூடியது 100 பங்குபற்றுனர்கள் மாத்திரமே அனுமதிக்கப்பட முடியும்.
நிகழ்விற்கு அழைப்பு விடுக்கப்பட்ட எவரேனும் சுகயீனமாக உணர்ந்தால் நிகழ்வில் பங்குபற்றுவதை தவிர்ப்பதை உறுதிப்படுத்துவது நிகழ்வின் ஏற்பாட்டாளரின் பொறுப்பாகும்.
மண்டபத்தின் அனைத்துப் பகுதிகளிலும் அதாவது வரவேற்பு பகுதி, நிகழ்வு நடைபெறுமிடம், உணவு பரிமாறுமிடம் போன்ற அனைத்துப் பகுதிகளிலும் அனைத்து இருக்கை ஒழுங்கமைப்புகளிலும் ஆசனங்களின் அனைத்துப் பக்கங்களிலும் ஒரு மீற்றர் தனிநபர் இடைவெளி பின்பற்றப்படுவது கட்டாயமாகும்.
மண்டபத்தினுள் சிறந்த காற்றோட்ட வசதி ஏற்படுத்தப்பட வேண்டும். வளிச் சீராக்கி பயன்படுத்தும் சந்தர்ப்பத்தில் போதுமான புதிய காற்று வெளியிருந்து உள்வாங்கப்படுவது உறுதி செய்யப்பட வேண்டும்.
கைகளைச் சரியான முறையில் சவர்க்காரமிட்டுக் கழுவுவதற்கான வசதி மண்டபத்தின் நுழைவாயிலில் பொருத்தமான இடத்தில் செய்யப்பட்டிருக்க வேண்டும்.
நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்படும் இடத்தில் கைகளை தொற்று நீக்கம் செய்துகொள்வதற்கு இலகுவாக கிடைக்கக் கூடிய வகையில் பொர