பொது விவாதத்திற்கு வருமாறு பகிரங்க சவால்
தனியார் துறை ஊழியர்களின் வேலைவாய்ப்பை பெற்றுக்கொள்ள அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து விவாதத்திற்கு வருமாறு முன்னாள் அமைச்சர் ஹர்ஷ டி சில்வா, முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவிற்கு பகிரங்க அழைப்பினை விடுத்துள்ளார்.
இது குறித்து ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர், “மத்திய வங்கி மூலம் தனியார் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க அரசாங்கம் உதவும் என்று கூறினர், ஆனால் இவர்களினால் எதுவும் செய்யப்படவில்லை எனவே இவ்வாறு கூறிய ராஜபக்ஷவுடன் நேருக்கு நேர் விவாதம் நடத்த நாங்கள் தயாராக உள்ளோம்” என கூறினார்.
அரசு ஊழியர்கள் தங்கள் சம்பளத்தில் ஒரு பகுதியை மே மாதம் முதல் கைவிட்டால் 100 பில்லியனை மிச்சப்படுத்த முடியும் என்று ஜனாதிபதி செயலாளர் பி. பி. ஜெயசுந்தர கூறினார். எனவே சம்பள வெட்டுக்களில் இருந்து அரசாங்கம் எவ்வளவு வசூலித்தது என்பதை வெளிப்படுத்த அவர் ஒரு அறிக்கையை முன்வைக்க வேண்டும் என்றும் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
தனியார் துறையினர் வேலைவாய்ப்பினை பெறுவதற்கு அரசு, தனியார் துறை நிறுவனங்கள் மற்றும் தொழிற்சங்கங்களுக்கு இடையே ஒரு கலந்துரையாடல் அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.












கருத்துக்களேதுமில்லை