ஸ்கொட்லாந்தில் ஒரு நாளைக்கு 15,500 கொவிட்-19 சோதனைகள் செய்ய முடியும்: Jeane Freeman

ஸ்கொட்லாந்தில் ஒரு நாளைக்கு 15,500 கொவிட்-19 சோதனைகள் செய்ய முடியும் என சுகாதார செயலாளர் ஜீன் ஃப்ரீமேன் (Jeane Freeman) தெரிவித்துள்ளார்.

முடக்கநிலை கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தளர்த்தப்படுவதால், நோய்த்தொற்றுகள் அதிகரிப்பதற்கு தயாராக இருப்பதை உறுதிசெய்யும் ஒரு பகுதியாக இது அமையுமென அவர் மேலும் தெரிவித்தார்.

கொரோனா வைரஸைக் கடப்பதற்கான அடுத்த முன்னேற்ற நடவடிக்கைகளில், சோதனை மற்றும் பாதுகாப்பு திட்டம் முக்கியமானது என்பதையும் சுகாதார செயலாளர் சுட்டிக்காட்டினார்.

இது மிகவும் திறம்பட பயன்படுத்தப்படுவதை உறுதிசெய்ய, சோதனைத் திறனுடன் நாம் இன்னும் என்ன செய்ய முடியும் என்பதைப் பார்க்க நாங்கள் தொடர்ந்து பார்க்கிறோம் எனவும் அவர் கூறினார்.

இதனிடையே தி ஹெரால்ட் (The Herald) சுட்டிக்காட்டியபடி நேற்று 3,200இற்குக்கும் மேற்பட்ட சோதனைகள் செய்யப்பட்டன. இது ஏப்ரல் 28ஆம் திகதி முதல் பதிவான மிகக் குறைந்த எண்ணிக்கையாகும்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்