கொரோனா வைரஸ் சோதனை இலக்கை பிரித்தானியா வெற்றிகரமாக கடந்துள்ளது!

கொரோனா வைரஸ் சோதனை திறனை மே மாத இறுதிக்குள் ஒரு நாளைக்கு 200,000ஆக உயர்த்துவதற்கான இலக்கை பிரித்தானியா கடந்துள்ளது.

நேற்று முன்தினம் (சனிக்கிழமை) சுமார் 205,634 சோதனைகள் இடம்பெற்றதாக அரசாங்கம் உறுதிப்படுத்தியுள்ளது.

சுகாதார செயலாளர் மாற் ஹான்காக் இதை ‘வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்தும் எங்கள் பயணத்தின் ஒரு முக்கியமான மைல்கல்’ என்று விவரித்தார்.

கொரோனா வைரஸுக்கு நேர்மறை சோதனை செய்த பின்னர் பிரித்தானியாவில் மேலும் 113 பேர் இறந்துவிட்டதாக தெரியவருகின்றது. நேர்மறை சோதனைக்குப் பிறகு உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 38,489ஆக உள்ளது.

சோதனைக்கான திறன் 200,000இற்க்கும் அதிகமாக இருக்கும்போது, நேற்று (ஞாயிற்றுக்கிழமை) 09:00 பிஎஸ்டி வரை 24 மணி நேரத்தில் 115,000இற்க்கும் மேற்பட்ட சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

பல நாட்களாக, சோதனைக்கு உட்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை குறித்த புள்ளிவிபரங்களை அரசாங்கத்தால் வழங்க முடியவில்லை என குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்