21,000 கையொப்பங்களுக்கு என்ன நடந்தது? – முன்னாள் ஜனாதிபதி

அர்ஜூன் மஹேந்திரனை இலங்கைக்கு கொண்டுவர 21 ஆயிரம் பத்திரங்களில் கையொப்பங்களை இட்டதாக முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அர்ஜூன் மஹேந்திரனை சிங்கப்பூரிலிருந்து இலங்கை அழைத்து வருவதற்காக நாட்டின் தலைவர் என்ற ரீதியில் தாம் மேற்கொண்ட முயற்சிகளையும் அவர் விபரித்துள்ளார்.

நேற்று (திங்கட்கிழமை) பொலன்னறுவையில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், இதற்காக, சட்டமா அதிபர் வரைந்த ஆவணங்களில் தாம் 21 ஆயிரம் தடவைகள் கையெழுத்திட்டதாகவும் இதற்கு மூன்று நாட்கள் சென்றதாகவும் குறிப்பிட்டார்.

முன்னாள் பிரதமர் மத்திய வங்கியின் ஆளுநர் பதவிக்கு சிங்கப்பூர் பிரஜையான அர்ஜூன் மஹேந்திரனை நியமித்த போது, தாம் அதனை வலுவான முறையில் ஆட்சேபித்ததாக மைத்ரிபால சிறிசேன குறிப்பிட்டார்.

ஆட்சி அமைத்து, இரு வாரங்களுக்குள் தமக்கும் முன்னாள் பிரதமருக்கும் இடையில் பிணக்குகளை ஏற்படுத்திக் கொள்ளக் கூடாது என்பதற்காக அர்ஜூன் மஹேந்திரனின் நியமனத்தை ஏற்கும் நிர்ப்பந்தம் உருவானதாக அவர் மேலும் கூறினார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.