‘செயற்கை மணல் இடுதல் வேலைத்திட்டம்’ மீனவ சமுதாயத்தின் எதிர்ப்பைப்போக்க அவசர அவசரமாக செயற்படுத்தப்பட்டது

கொழும்பு தெற்கு செயற்கை மணல் இடுதல் வேலைத்திட்டம் தொடர்பான அமைச்சரவை முடிவு இந்தவருடம் ஜனவரி 22 ஆம் திகதி அன்றே ஒப்புதல் அளிக்கப்பட்டதாக முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய அவர், இந்த திட்டத்தை கடலோர பாதுகாப்புத் துறை திட்டமிட்டு செயற்படுத்தியது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இந்த கடலோர பாதுகாப்புத் துறை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக இருந்தபோது அவரின் கீழ் இருந்த மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சின் கீழ் செயற்பட்டது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

எனவே மாநகரங்கள் மற்றும் மேற்கு அபிவிருத்தி அமைச்சிற்கு இதில் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியில் கடலோர சீர்திருத்த நடவடிக்கை தொடர்பான அமைச்சரவை முடிவுகள் 2020 ஜனவரி 22 ஆம் திகதி எட்டப்பட்ட நிலையில், இதற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டு, மீன்பிடி சமூகத்தின் எதிர்ப்பைத் தவிர்ப்பதற்காக இந்த திட்டம் ஏப்ரல் மாதத்தில் ஊரடங்கு காலத்தில் அவசர அவசரமாக செயற்படுத்தப்பட்டது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.