சிங்கப்பூரில் சிக்கித் தவித்த 291 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக சிங்கப்பூரில் சிக்கித் தவித்த இலங்கையர்கள் 291 பேர் சற்றுமுன்னர் தாயகம் திரும்பியுள்ளனர்.

ஶ்ரீ லங்கன் விமான சேவைக்கு சொந்தமான யூ.எல். 303 ரக விசேட விமானம் மூலம் குறித்த பயணிகள் இன்று (செவ்வாய்க்கிழமை) நாட்டை வந்தடைந்துள்ளனர்.

இதனையடுத்து அவர்கள் கிருமி நீக்கம் செய்யப்பட்டதன் பின்னர், தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்காக தனிமைப்படுத்தல் முகாம்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்