முன்னாள் கடற்படைத் தளபதி மீது புதிய குற்றச்சாட்டை முன்வைத்தார் அவன்ட் கார்ட் நிறுவனத்தின் தலைவர்

முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரட்ன தம்மிடம் கப்பம் கோரியதாக அவன்ட் கார்ட் நிறுவனத்தின் தலைவர் நிசாங்க சேனாதிபதி குற்றம் சுமத்தியுள்ளார்.

அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பிலான ஆணைக்குழுவில் நேற்று (திங்கட்கிழமை) முன்னிலையாகி சாட்சியம் வழங்கியிருந்தார். அதன்பின்னர் ஊடகவியலாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அவர் மேலும் கூறியுள்ளதாவது, “ரவீந்திர விஜேகுணரட்ன என்னிடம் மறைமுகமாக கப்பம் கோரினார்.

அத்துடன் இரண்டு பேரை ஆயுதங்களுடன் அனுப்பி என்னை கொலை செய்யவும் முயற்சித்திருந்தார்.

மேலும் கடந்த 2015ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ரவீந்திரவின் பிரதான பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் இருவரை அவர் ஆயுதங்களுடன் வீட்டுக்கு அருகாமையில் அனுப்பி வைத்திருந்தார்.

இதன்போது, என்னிடம் தனிப்பட்ட பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் இருந்த ஒரே காரணத்தனால் நான் உயிர் தப்பிக்கொண்டேன்.

குறித்த சம்பவம் தொடர்பாக மிரிஹான பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளேன்” என குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்