நீதிமன்ற தீர்ப்பு ஜனநாயக வரலாற்றில் முக்கிய திருப்பு முனையாக அமையும் – முன்னாள் சபாநாயகர்
பொதுத்தேர்தல் திகதியை ஆட்சேபித்து உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுக்களை விசாரிப்பது தொடர்பான தீர்ப்பு இலங்கையின் ஜனநாயக வரலாற்றில் மிகமுக்கிய திருப்புமுனையாக அமையும் என்று முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
இவ்வாறு தாக்கல் செய்யப்பட்ட 7 அடிப்படை உரிமை மீறல் மனுக்களையும் விசாரணைக்கு ஏற்பதா, இல்லையா என்ற தீர்மானமும் இன்னமும் இழுபறி நிலையிலுள்ள நிலையில் டுவிட்டர் பக்கத்தில் இட்டுள்ள பதிவிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு சுமார் மூன்று மாதங்கள் கடந்திருக்கிறது. அரசியலமைப்பின் 70 ஆவது பிரிவு இன்னமும் கேள்விக்குறியான நிலையிலேயே இருக்கிறது என்றும் அவர் சுட்டிக்காட்டியிருக்கிறார்.
“இவ்விடயம் தொடர்பில் தற்போது நீதிமன்றம் ஆராய்ந்து வருகின்றது. அதற்கு முழுமையாக மதிப்பளிக்கும் அதேவேளை, இலங்கையின் ஜனநாயக வரலாற்றில் மிகமுக்கிய சந்தர்ப்பமொன்றாக அமையவிருக்கும் இந்தத் தீர்ப்பிற்காக நாம் காத்திருக்கிறோம்” என குறிப்பிட்டுள்ளார்.
கருத்துக்களேதுமில்லை