வவுனியா குளங்களில் ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசங்கள் அகற்றப்பட்டன

வவுனியா குளங்களில் மக்களால் ஆக்கிரமிக்கப்பட்டு வேலியிடப்பட்ட இடங்களை பொலிஸாரின் உதவியுடன் அபிவிருத்தி திணைக்களம் இன்று (செவ்வாய்க்கிழமை) அகற்றியது.

வவுனியா- கமநல அபிவிருத்தி திணைக்களத்தினால், வவுனியாவிலுள்ள குளங்களில் அத்துமீறி ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்கள் மற்றும் வயல் நிலங்களை, மேட்டு நிலங்களாக்கும் செயற்பாட்டை மேற்கொண்டவர்களுக்கு எதிராக கமநல அபிவிருத்தி சட்டத்தின் 32வது மற்றும் 83வது பிரிவின் கீழ் அறிவுறுத்தல் வழங்கப்பட்டு தற்போது வேலிகளை அகற்றும் நடவடிக்கைகள் இன்று மேற்கொள்ளப்பட்டது.

முதற்கட்டமாக பட்டானிச்சூர்புளியங்குளம், வேப்பங்குளம், கோயில்குளம், ஒயார்சின்னக்குளம் உட்பட நான்கு குளங்களில் அத்துமீறி ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களில் உள்ள வேலிகளை அகற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

குறித்த ஆக்கிரமிக்கப்பட்ட காணிகளில் போடப்பட்டிருந்த வேலிகள், கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் உத்தியோகத்தர்கள் மற்றும் உதவி ஆணையாளர் உட்பட பொலிஸார் நேரடியாக சென்று அப்புறப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.