இராணுவத்தின் புதிய தலைமை அதிகாரி கடமைகளை பொறுப்பேற்றார்

இலங்கை இராணுவத்தின் புதிய தலைமை அதிகாரியாக மேஜர் ஜெனரல் ஜகத் குணவர்தன கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார். 

இவர் இலங்கை இராணுவத்தின் 55ஆவது தலைமை அதிகாரியாக நேற்றைய தினம் (திங்கட்கிழமை) பதவியினை பொறுப்பேற்றுக் கொண்டார்.

இதுவரை இந்தப் பொறுப்பை வகித்த மேஜர் ஜெனரல் சத்தியகீர்த்தி லியனகே ஓய்வு பெற்றதையடுத்தே மேஜர் ஜெனரல் ஜகத் குணவர்தன குறித்த பதவியை பொறுப்பேற்றுள்ளார்.

இவர் பதவியேற்ற பின்னர் இராணுவ தளபதி லெப்டினன்ட் ஷவேந்திர சில்வாவை சந்தித்திருந்தார். மேஜர் ஜெனரல் ஜகத் குணவர்தன முன்னர் இராணுவத் தொண்டர் படையணியின் தளபதியாக கடமையாற்றி இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.