தனியார் பேருந்து போக்குவரத்து சேவையினை மீள ஆரம்பிப்பது குறித்து கலந்துரையாடல்

தனியார் பேருந்து போக்குவரத்து சேவையினை மீள ஆரம்பிப்பது தொடர்பாக போக்குவரத்து அமைச்சருக்கும் அதிகாரிகளுக்கும் இடையில் கலந்துறையாடலொன்று இடம்பெறவுள்ளது.

இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெறவுள்ள இந்த கலந்துறையாடலின்போது,  வெளிமாவட்டங்களில் இருந்து கொழும்புக்கு பேருந்துகளை ஈடுபடுத்துவது மற்றும் சுகாதார பாதுகாப்பு நடைமுறைகள் குறித்தும் ஆராயப்படுப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, வீழ்ச்சியடைந்துள்ள தனியார் பேருந்து போக்குவரத்து சேவையை விரைவில் கட்டியெழுப்ப வேண்டிய தேவை உள்ளதாக தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரட்ன தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தெரிவித்துள்ள அவர், “கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக தனியார் பேருந்து சேவை போக்குவரத்தில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. பேருந்துகளில் சமூக இடைவெளியினை பேண வேண்டிய சூழலில் கொழும்பை அண்டிய மற்றும் வெளிமாவட்டங்களில் அதிகளவில் பயணிகளை ஏற்றிச்செல்லும் பேருந்துகள் குறித்து தொடர்ந்தும் கவனம் செலுத்தப்பட்டு வருகின்றது.

இந்த கலந்துறையாடல்கள் தொடர்ந்தும் நீடிக்கப்படுவதால் பயணிகள் மாற்று நடவடிக்கைகளை முன்னெடுத்துவருகின்றனர். இதனால் தனியார் பேருந்து போக்குவரத்து துறை பாரிய இழப்பினை சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும்.

இதற்கு உடனடியாக தீர்வு காணப்பட வேண்டியது அவசியமாகும்” என தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரட்ன தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.