உயர்நீதிமன்றத்தின் இறுதியான முடிவை நாம் மதிக்கின்றோம் – தேர்தலுக்குத் தயார் என்கிறார் சம்பந்தன்

நாடாளுமன்றத் தேர்தல் தமிழ்த் தேசியக் கூட்ட மைப்புக்கு சவால் அல்ல. நாம் எந்நேரத்திலும் தேர்தலை எதிர் கொள்ளத் தயாராக இருக்கின்றோம். எனவே, சுகாதார விதிமுறைகளின்படி அமைதியான – நீதியான – தேர்தல் நடைபெற வேண்டும் என் பதே எமது விருப்பம்.

– இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பின ருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

நாடாளுமன்றக் கலைப்பு மற்றும் தேர்தல் திகதி தொடர்பில் உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள இறுதியான முடிவை நாம் மதிக்கின்றோம். இனிமேல் அதை நாம் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ள முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

நாடாளுமன்றக்கலைப்புக்கு எதிராகவும், தேர்தல் திகதிக்கு எதிராகவும் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுக்களை விசாரணைக்கு ஏற் றுக்கொள்வதில்லை என்ற முடிவை பிர தம நீதியரசர் உட்பட ஐந்து நீதியரசர்களைக் கொண்ட உயர்நீதிமன்ற ஆயம் நேற்று ஏகமனதாக முடிவு எடுத்து அறிவித்துள்ளது.

இது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு என்ன வென்று அதன் தலைவர் இரா.சம்பந்தனிடம்  நேற்று வினாவியபோதே அவர் இவ்வாறு பதிலளித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

உயர்நீதிமன்றத்தின் இறுதி முடி வையடுத்து நாட்டின் தற்போதைய நிலைமைக்கேற்ற மாதிரி தேர்தலை நடத்துவதற்கான திகதி தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்கள் கூடி தீர்மானம் எடுக்கவுள்ளனர் என நாம் அறிந்தோம். அதை நாம் வரவேற்கின்றோம். எமது ஒத்துழைப்புகளை வழங்குவோம். சுகாதார விதி முறைகளின்படி அமைதியான – நீதியான – தேர்தல் முக்கியம் என்பதை மீண்டும் மீண்டும் வலியுறுத்திக் கூற விரும்புகின்றோம் – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.