தேர்தல் நடத்தப்படும் தினம் குறித்து இன்று தீர்மானம்

தேர்தல் நடத்தப்படும் தினம் மற்றும் அதற்கான நடவடிக்கை என்பன தொடர்பாக இன்று முக்கிய கலந்துரையாடலொன்று இடம்பெற்றது.

அதற்கமைய தேர்தல்கள் ஆணைக்குழுவின் அங்கத்தவர்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) இந்த கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளனர்.

தேர்தல் தினம் மற்றும் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமையை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மனுக்களையும் உயர்நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது.

ஐந்து நீதியரசர்கள் கொண்ட ஆயத்தின் முன்னிலையில் இந்த மனுக்கள் சம்பந்தமான சமர்பணங்கள் கடந்த 10 அமர்வுகளில் முன்வைக்கப்பட்டிருந்தன. இந்தநிலையில் மனுக்களை தள்ளுபடி செய்வதாக உயர்நீதிமன்றம் நேற்று அறிவித்தது.

இந்நிலையில், பொதுத்தேர்தலுக்கான திகதியை இன்றைய தினம் இடம்பெறவுள்ள சந்திப்பின் பின்னர் தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானிக்க உள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய  தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்