முல்லைத்தீவில் கிணற்றிலிருந்து யுவதியின் சடலம் கண்டெடுப்பு
முல்லைத்தீவு – விசுவமடு மாணிக்கபுரம் கிராமத்தில் அம்மன் கோயில் வீதியை அண்டியுள்ள வீடொன்றின் பாவனையிலுள்ள கிணற்றிலிருந்து யுவதியொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த 21 வயதான யுவதியின் சடலம் பொருமிப்போன நிலையில் இன்று (புதன்கிழமை) பகல் கண்டெடுக்கப்பட்டதாக புதுக்குடியிருப்புப் பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த 31ஆம் திகதி இரவு வீட்டில் இருந்து காணாமல்போன இராமலிங்கம் நிரோஜினி என்பவரே இவ்வாறு சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
அந்த யுவதி வசித்த வீட்டு வளவிலுள்ள கிணற்றிலிருந்து துர்நாற்றம் வீசியதையடுத்து அந்தக் கிணற்றைப் பார்வையிட்டபோதே மேற்படி சடலம் பொருமிப்போன நிலையில் மிதந்து கிடந்துள்ளது. இதனையடுத்து பொலிஸார் சடலத்தைக் கண்டெடுத்துள்ளனர்.
பிரேத பரிசோதனைகளுக்காக சடலம் மாஞ்சோலை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டுள்ள செல்லப்பட்டுள்ள நிலையில், இச்சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
கருத்துக்களேதுமில்லை