கொரோனா தொற்றிலிருந்து மேலும் 13 பேர் பூரண குணமடைந்தனர்

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சைப் பெற்று வந்தவர்களில் மேலும் 13 பேர் பூரண குணமடைந்து வைத்திசாலையில் இருந்து வெளியேறியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, இதுவரையில் நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி பூரண குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 836 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 1683 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

நேற்று மாத்திரம் 40 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில், இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக அந்த அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளான 836 பேர் வைத்தியசாலைகளில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் இலங்கையில் இதுவரை 11 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன என்பத குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்