விடுமுறையில் பிரித்தானிய பிரஜைகள் வெளிநாடு செல்ல முடியும் -இளநிலை சுகாதார அமைச்சர்

இந்த ஆண்டு விடுமுறையில் பிரித்தானிய பிரஜைகள் வெளிநாடு செல்ல முடியும் என தான் நம்புவதாக இளநிலை சுகாதார அமைச்சர் எட்வேர்ட் ஆர்கர் தெரிவித்துள்ளார்.

ஆனால் கொரோனா வைரஸ் தாக்கத்தின் இரண்டாம் அலை உருவாகுவதை அரசாங்கம் விரும்பவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

எனவே எதிர்வரும் திங்கட்கிழமை முதல் லண்டனிற்கு பயணம் செய்யும் சாதாரண சுற்றுலா பயணிகள் 14 நாட்களுக்கு சுய தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்று அரசாங்கம் வலியுறுத்தும் ஆனால் அத்தியாவசிய சர்வதேச பயணங்களை மேற்கொள்பவர்களுக்கு விதிவிலக்கு வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.

இது குறித்து பிபிசி செய்திக்கு வழங்கிய விசேட செவ்வியில் கருத்து தெரிவித்த அவர், “மக்கள் மிகவும் விரும்பும் பல விஷயங்களில் ஒன்று விடுமுறை என்று எனக்குத் தெரியும், ஆனால் ஒரு சுகாதார அமைச்சராக நான் இதைப் பற்றி மிகவும் முன்எச்சரிக்கையாக இருக்கிறேன்.

இந்த ஆண்டு ஏதேனும் ஒரு கட்டத்தில் மக்கள் விடுமுறைக்கு செல்ல முடியும் என்று நான் நம்புகிறேன், ஆனால் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்” என கூறினார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.