மாவீராகள்; துயிலும் இல்லங்களை வன்முறை மூலம் அரசு ஆக்கிரமிப்பு! தேராவில் தொடர்பில் சிறிதரன் சீற்றம்

மாவீரர்களின் நினைவுகூரலை வன்முறை மூலம் தடுக்க நினைக்கிறது அரசாங்கம் தேராவில் மாவீரர் துயிலுமில்லத்தின் ஆக்கிரமிப்பு தொடர்பில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிpவஞானம் சிறீதரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
துற்போது தேராவில் மாவீரர் துயிலுமில்லத்தில் வனவளத்திணைக்களத்தினால்  எல்லையிட்டும் அடாத்தாக பிடித்தும் துயிலும் இல்ல வயாகத்தினுள் இராணுவத்தினரால் மரக்கறிப்பயிர்ச் செய்கை செய்யப்படுகிறது. இவ்விடயம் தொடர்பாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இன்று துயிலும் இல்லத்தை பார்வையிடச்சென்றிருந்தார்.
ஆதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார் அவர் அங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் தங்கள் உயிர்களை தியாகம் செய்த மாவீரர்களின் வித்துடல்கள் இங்கு விதைக்கப் பட்டிருக்கிறது. யுத்தம் நிறைவுற்றதன் பின்னர் 2015 ஆண்டிற்கு பின் இவ்விடத்தில் தங்கள் பிள்ளைகளை இவ்விடத்தில் நினைவு கூர்ந்து வருகிறார்கள். இது தற்போது ஒரு அரச காரணியாக இருக்கிறது. கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவில் 101ஆம் இலக்கத்தை உடைய இந்த பகுதி அரச காரணியாக ஒதுக்கப்பட்டுள்ளது. அரச காணியை வனவளத்திணைக்களம் தன்னுடைய அடையாளப்படுத்துவதாக இருந்தால் கிராம அலுவலர் பிரதேச செயலாளர் ஆகியோரின் அனுமதியுடனே இவ்விடத்தில் அடையாளப்படுத்த வேண்டும். ஆனால் அவர்கள் செய்திருப்பது இராணுவ முகாமை சுற்றி இருக்கிறார்கள். அப்படியாயின் வனவளப் பிரிவினால் எல்லைப்படுத்தப்பட்டால்  இராணுவம் உடனடியாக  வெளியேற வேண்டும்.  வனவளப்பிரிவு எல்லைப்படுத்தினால் இராணுவம் இருக்கலாம். ஆனால் எங்கள் மக்கள் எல்லைப் படுத்திய பகுதிகளில் நெல் விதைக்க முடியாது வேறு தோட்டங்களையோ செய்ய முடியாது சுற்றிவர அடையாளப்படுத்த பட்டிருக்கிறது இராணுவம் மட்டும் முகாம் அமைத்திருக்கிறார்கள் என்றால் இது ஒரு திட்டமிடப்பட்டு மக்கள் தங்கள் பிள்ளைகளுக்கு வணக்கம் செலுத்த முடியாமல் தடுக்கும் வகையிலும் அடாத்தாக செயற்படுகிறார்கள்.
எங்கள் மக்களின் மனநகலைகளை  உள்ள எண்ணங்களை புரிந்து கொள்ளாமல் இந்த அரசாங்கம் நடந்து கொள்கின்ற முறைமைகள் மிகவும் சாதகமானது. குறிப்பாக வன்முறைக்கான  அடையாளங்களை இப்போது ஆரம்பித்து இருக்கிறார்கள். கோத்தபாய ராஜபக்ச ஜனாதிபதியாக வந்த பிற்பாடு இராணுவ பிரசன்னங்கள் இராணுவ அதிகாரிகளினுடைய நியமனங்கள் அவர்களின் நடவடிக்கைகள் அனைத்துமே தாங்கள் செய்தால்  யாரும் எதையும் கேட்க முடியாது என்னும் நிலைப்பாட்டில் இருக்கிறார்கள்
இவ்வாறாக எமது மக்களின் நினைவு கூரும் இடங்களையும் மெல்ல மெல்ல அபகரிக்க தொடங்கி இருக்கிறார்கள். இது தொடர்பில் நாம் சர்வதேச அமைப்புக்கள் உலக நாடுகளின் மனித நேய அமைப்புக்களிடம் இந்த கோரிக்கையை முன்வைக்கிறோம். 2015 களில் ஜெனீவாவில் கொண்டு வரப்பட்ட தீர்மானங்களில் குற்றங்களை இழைத்த இராணுவத்தினரின் செயற்பாடுகளை விலாவாரியாக சொல்லப்பட்டிருக்கிறது. குற்றங்கள் இழைத்தவர்கள் அடையாளம் காணப்படுதல் குற்றத்திற்கான காரணங்கள் மக்கள் தங்களின் பிள்ளைகளுக்கு வணக்கம் செலுத்துவது போன்ற விடயங்கள் அவற்றில் உள்ளடக்கப்பட்டிருக்கிறது. ஜெனீவா தீர்மானங்களில் இவ்விடயம் உள்ளடக்கப்பட்டு இருந்தும் இவற்றை எல்லாம் புறம் தள்ளி சர்வதேச சட்டங்களையும் சர்வதேச தீர்மானங்களையும் புறந்தள்ளி தான் போன போக்கில் இலங்கை அரசு நடக்க முயல்கிறது.இது அவர்களின் வழமையான செயற்பாடு இருந்தாலும் சர்வதேசத்தின் கவனத்திற்கு கொண்டு வந்து உரிய வகையில் நாம் இவற்றை கையாளுவோம் எனவும் மேலும் தெரிவித்தார்.
முன்னாள்நாடாளுமன்ற உறுப்பினருடன் கிழக்கு பிரதேச சபையின் உறுப்பினர்களான ஜீவராசா, கலைவாணி ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்