கட்டுப்பாட்டில் தேர்தல் நடைபெறும் என்றால் அதனை எதிர்கொள்ளத் தயார் – ஜே.வி.பி.
கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டில் தேர்தல் நடைபெறும் என்றால் அதனை எதிர்கொள்ள தாம் தயாராக இருப்பதாக மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பேசிய அவர், பொதுத் தேர்தல் பொதுமக்களின் பாதுகாப்பிற்கு எந்த ஆபத்தையும் ஏற்படுத்தக்கூடாது என குறிப்பிட்டார்.
மேலும் ஊரடங்கு உத்தரவு தினமும் இரவில் அமுல்படுத்தப்படுகின்றது என்றும் இந்த செயற்பாடே இன்னும் கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டில் இல்லைஎன்பதை அறிவுறுத்துகிறது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
அத்தோடு எதிர்காலத்தில் தேர்தல் தொடர்பான பணிகளில் ஈடுபடும் அரசாங்க அதிகாரிகளைப் பாதுகாக்க போதுமான பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படுவதை உறுதி செய்யுமாறும் விஜித ஹேரத் அரசாங்கத்தை கேட்டுக்கொண்டார்.
தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டவுடன் அரசியல் கட்சிகள் பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும். எவ்வாறாயினும், பொதுக் கூட்டங்கள் மற்றும் தேர்தல் தொடர்பான பிரச்சார நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு சூழல் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
கருத்துக்களேதுமில்லை