இடுகம கொவிட்- 19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்தின் மீதி 1,243 மில்லியனாக அதிகரிப்பு

தனிப்பட்ட, நிறுவன அன்பளிப்புகள் மற்றும் நேரடி வைப்புகளுடன் இடுகம கொவிட் -19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்தின் வைப்பு மீதி 1,243 மில்லியனாக அதிகரித்துள்ளது.

Sri Ramco Roofing Lanka (Pvt) Ltd நிறுவனம் 2 மில்லியன் ரூபாவையும், Sri Ramco Lanka (Pvt) Ltd நிறுவனம் 2 மில்லியன் ரூபாவையும், Siam City Cement (Lanka) Ltd நிறுவனம் 5 மில்லியன் ரூபாவையும் நிதியத்திற்கு அன்பளிப்பு செய்துள்ளன. அதற்கான காசோலைகள் நேற்று(புதன்கிழமை) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டன.

உமாஓய பல்நோக்கு அபிவிருத்தி திட்டம் 522,231.19 ரூபாவையும், Union Chemicals Lanka PLC நிறுவனம் 500,000 ரூபாவையும், விசேட வைத்திய நிபுணர் திருமதி டீ.ஏ விஜேசுந்தர 100000 ரூபாவையும் அபான்ஸ் நிறுவனத்தின் தலைவர் திரு ருசீ பெஸ்டொன்ஜி ஒரு மில்லியன் ரூபாவையும் நிதியத்திற்கு அன்பளிப்பு செய்துள்ளனர்.

இடுகம இணையத்தளத்தின் ஊடாக கிடைத்துள்ள தொகை 1,786,050 ரூபாவாகும். தற்போது இடுகம கொவிட் 19 சுகாதார, பாதுகாப்பு நிதியத்தின் மீதி 1,243,656,318.96 ரூபாவாகும்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.