நல்லூரில் போதைப்பொருளுடன் 19 வயது இளைஞன் கைது!

நல்லூர் பகுதியில் கெரோயின் போதைப்பொருளை உடமையில் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவரை கோப்பாய் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இதன்போது நல்லூர் பகுதியைச் சேர்ந்த 19 வயதான இளைஞனே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

நல்லூர் பகுதியில் கெரோயின் போதைப்பொருள் விற்பனை செய்யப்படுவதாக கோப்பாய் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் பொலிஸார் விசாரனைகளை மேற்கொண்டிருந்தனர்.

இதன்போது சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடிய இளைஞன் ஒருவரை பொலிஸார் சோனையிட்டிருந்தனர். அப்போது குறித்த இளைஞனிடம் இருந்து 70 மில்லிக்கிராம் கெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

இந்தநிலையில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்