மக்கள் நலன்புரிச் சங்கத்தினால் முன்னாள் பெண் போராளிக்கு உதவி…

மட்டக்களப்பு வவுணதீவுப் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட தாண்டியடி பிரதேசத்தில் முன்னாள் பெண் போராளி குடும்பத்தின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் முகமாக மக்கள் நலன்புரிச் சங்கத்தினால் ஒரு தொகைப் பணம் வழங்கி வைக்கப்பட்டது.

மக்கள் நலன்புரிச் சங்கத்தின் இணைப்பாளர் என்.நகுலேஸ் அவர்களிடம் மேற்படி பெண் போராளியினால் விடுக்கப்பட்ட வேண்டுகோளின் அடிப்படையில் மேற்படி உதவித் தொகை வழங்கிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இரண்டு பெண் பிள்ளைகளின் தாயான குறித்த இம் முன்னாள் போராளி மிகவும் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்ந்து வரும் நிலையில் சிறு உதவியாக இருந்தாலும் தற்போதைய நிலையில் அவரின் குடும்பத்தைக் கொண்டு நடாத்தக் கூடிய விதத்திலாகவே இவ் உதவி வழங்கப்பட்டுள்ளதாக இதன் போது இணைப்பாளர் என்.நகுலேஸ் தெரிவித்தமையும் குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்