ஊரடங்கு சட்டத்தின் போது சட்டவிரோத மாணிக்கல் அகழ்வில் ஈடுபட்ட இருவர் பொகவந்தலாவை பொலிஸாரல் கைது

ஹட்டன் கே.சுந்தரலிங்கம்
ஊரடங்கு சட்டம் அமுலில் இருந்த போது பொகவந்தலா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொகவந்தலா பகுதியில் சட்டவிரோத மாணிக்கல் அகழ்வில் ஈடுபட்ட இருவரை பொகவந்தலா பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பொகவந்தலா மோர பகுதியில் அனுமதி பத்திரமின்றி சட்டவிரோதமான முறையில் மாணிக்கல் அகழ்வில் ஈடுபட்டிருந்த வேளையிலேயே நேற்று (05) மாலை 6.00 மணியளவில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைத்த தகவலினையடுத்து குறித்த பகுதியில் சுற்றிவளைப்பினை மேற்கொண்ட பொலிஸார் குறித்த சந்தேகநபர்களை கைது செய்துள்ளனர்.
இவர்களிடமிருந்து மணிக்கல் அகழ்விற்காக மண்வெட்டி,மாணிக்கல் அரிப்பதற்காக பயன்படுத்தும் கூடைகள், உட்பட பல உபகரணங்கள் இதன்போது  மீட்கப்பட்டுள்ளதாகவும் குறித்த சந்தேக நபர்கள் பொலிஸ் பிணையில் செல்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் எதிர்வரும் தினங்களில் ஹட்டன் நீதவான் முன்னிலையில் ஆஜர் செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவம் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இதே வேளை ஊரடங்கு காலப்குதியில் அனுமதிபத்திரமின்றி சட்டவிரோதமான முறையில் மதுபானம் விற்பனை செய்த நபர் ஒருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த நபர் பொகவந்தலா பெட்ரோசோ பகுதியிலிருந்து நேற்று மாலை சாராய விற்பனையில் ஈடுபட்டிருந்த வேளையிரேயே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சந்தேக நபரும் பொலிஸ் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் எதிர்வரும் தினங்களில் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளன.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.