வீட்டுக்குள் கசிப்பை மறைத்து வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் பூசகர் கைதாகி பிணையில் விடுதலை!

வீட்டுக்குள் கசிப்பை மறைத்து வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் பூசகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெல்லிப்பழை பொலிஸார் தெரிவித்தனர்.

ஏழாலையைச் சேர்ந்த பூசகர் ஒருவரே 27 லீற்றர் கசிப்பை வீட்டின் குளியலறையில் மறைத்து வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் நேற்று வியாழக்கிழமை கைது செய்யப்பட்டு பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

“காங்கேசன்துறை பிராந்தியத்துக்குப் பொறுப்பான மூத்த பொலிஸ் அத்தியட்சகர் சேனாதீரவின் கீழான சிறப்புக் குற்றத்தடுப்புப் பொலிஸார் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது இந்த கைது இடம்பெற்றுள்ளது.

பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்ட சந்தேக நபர் அடுத்தவாரம் மல்லாகம் நீதிமன்றில் முற்படுத்தப்படுவார்” எனவும் தெல்லிப்பழை பொலிஸார் குறிப்பிட்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.